UPDATED : நவ 14, 2026 03:42 AM
ADDED : நவ 13, 2026 06:04 PM

அ நிறம் | அளவு
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சி குடியிருப்பு மணியாரம்பட்டி சாலையில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு 4 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். மற்றொரு விடுதி காப்பாளர் பொறுப்பு வகிப்பதால் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வந்து செல்கிறார். விடுதியில் இரவு காப்பாளரும் இல்லை. ஒரு சமையலர் மட்டுமே உள்ளார். ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனியாக உள்ள விடுதியில் காம்பவுண்ட் சுவர் இல்லை. விடுதியைச் சுற்றிலும் பலர் மது அருந்துகின்றனர். இதனால் விடுதியை சுற்றிலும் காலி மது பாட்டில்கள் நிறைந்து கிடக்கிறது. மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விடுதியில் முறையாக பராமரித்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
