தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாராக மாறிய பள்ளி வளாகம்

 பாராக மாறிய பள்ளி வளாகம்

 பாராக மாறிய பள்ளி வளாகம்


ADDED : ஏப் 16, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரையில் பள்ளி வளாகத்தை மதுபானக்கூடமாக மதுப்பிரியர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளிகளில் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை சிவகங்கை ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் இப்பள்ளிக்கு பின்புறம் உள்ள வளாகம் மற்றும் மைதானத்தில் இரவில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், உணவு பொருள் கழிவையும் அப்படியே விட்டு சென்று விடுகின்றனர். மேலும் மைதானத்திற்குள் பாட்டில்களை உடைத்து போடுவதால் காலையில் விளையாடும் மாணவர்களின் கால்களில் காயம் ஏற்படுகிறது. போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us