/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிக் கல்வித்துறை பேரவை கூட்டம்
/
பள்ளிக் கல்வித்துறை பேரவை கூட்டம்
ADDED : பிப் 04, 2024 05:46 AM

சிவகங்கை : சிவகங்கையில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பட்டாபி நாகராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சவரிநாதன் அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநிலத்தலைவர் முருகன், மாநில பொருளாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாநில தலைவர் சீனிவாசன் பேசினர்.
கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம் 1 முடித்தவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். இளநிலை உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நேரடி உதவியாளர் பணி நியமனத்தை நிறுத்திவிட்டு நாளது தேதி வரை பதவி உயர்வு பெறாமல் உள்ள இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அமைப்புச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.