/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்
/
மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்
மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்
மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்
ADDED : நவ 19, 2024 05:26 AM
இளையான்குடி: மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை பொறுத்து கலெக்டர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். விடுமுறை அளிக்கும் நாட்களுக்கு பதிலாக மற்றொரு நாளில் வேலை நாளாக பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் பெய்யும் மழைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரையில் காலையில் பள்ளி துவங்கும் நேரத்தில் மழை பெய்ததை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால் பள்ளி மாணவர்கள் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர்.
இளையான்குடி பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: இளையான்குடியில் நேற்று காலை பள்ளி நேரத்தில் மழை பெய்ததை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று (நேற்று)விடுமுறையா என கேட்டபோது அவர்கள் சிறிய மழை தான் பெய்கிறது. சிறிது நேரத்தில் மழை நின்று விடும் என்றும், பள்ளியின் மொத்த வேலை நாட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.மேலும் உயர் அதிகாரிகளிடமும் விடுமுறை விடுவதற்கு கேட்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் பல தலைமை ஆசிரியர்கள் வெளியூரிலிருந்து வேலைக்கு வருவதினால் அவர்கள் மழை பெய்வது குறித்து விசாரித்த பிறகே விடுமுறை குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மழைக்காலங்களில் மாணவர்களின் நலன் கருதி மழை பெய்தால் மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாகவே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதை முறையாக மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: தலைமை ஆசிரியர்கள் அப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளித்து மாணவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினர்.
பள்ளி துவங்கும் நேரத்தில் மழை பெய்ததை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால் பள்ளி மாணவர்கள் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர்.