ADDED : மார் 02, 2024 05:11 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை : உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தேவகோட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.
நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் 238 எண் அரசாணையை ரத்து செய்யவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை வைத்து மாவட்ட தலைவர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஜான்சன், மாவட்ட பொருளாளர் அந்தோணிச்சாமி தலைமையில் போராட்டம் நடத்தினர்.
