/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி
/
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி
ADDED : டிச 08, 2024 09:47 PM
திருக்கோஷ்டியூர்:திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் நேற்று மாலை மூழ்கிய பள்ளி மாணவர்களை சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருக்கோஷ்டியூர் கோயில் முன்பாக உள்ள ‛திருப்பாற்கடல்' எனப்படும் குளம் உள்ளது. தற்போது குளத்தில் மழையால் நீர் நிரம்பியுள்ள இக்குளத்தின் மேற்கு படித்துறையில் நேற்று மாலை 5:00 மணி அளவில் குளிக்க சென்றவர்கள் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக நிற்பதும். படித்துறையில் மீன் தூண்டில்கள்,சோப்பு, டவல்,சிறுவர்களின்ஆடைகள் இருப்பதையும் பார்த்துள்ளனர்.
ஆனால் யாரும் படித்துறையில் இல்லாததும், குளத்தில் குளிக்காததும் தெரிந்ததை அடுத்து, விசாரிக்கையில் இது திருக்கோஷ்டியூர் கண்ணாத்தாள் கோயில் தெருவில் வசிக்கும் ஜெயலெட்சுமி என்பவரின் மகன்களான 7 ம் வகுப்பு படிக்கும் விஷ்ணு12 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீகிருஷ்ணா9 ஆகியோருடையது என்பது தெரிந்தது. இருவரும் வீட்டிலும், வெளியிலும் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கோயில் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோயில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் சிலர் தேடிப்பார்த்த போது எதுவும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
திருப்புத்தூர் தீயணைப்புத்துறையினர் வந்து குளத்தில் இரவு 7:30 மணி முதல் தேடத் துவங்கினர். டி.எஸ்.பி. செல்வக்குமார், தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரகாஷ் முன்னிலையில் படித்துறையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில்கிராமத்தினர், இன்ஸ்பெக்டர் செல்வராகவன் ஆகியோரும் தீயணைப்பு வீரர்களுடன் பங்கேற்றனர்.
இரவு 8:50 மணி அளவில் சிறுவர்களின் உடல்களை மீட்டனர். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.