ADDED : நவ 24, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் கணித செயல்பாடுகள் நடந்தது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.
பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா செய்து காண்பித்தார். ஆசிரியர் கமலாபாய், வாசுகி, வித்யா கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.