நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, ; காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் மதுரை போனிக்ஸ் லயன்ஸ் கிளப் இணைந்து அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்ச்சியை நடத்தியது.
கல்லுாரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். புனித மைக்கேல் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி பிரிட்ஜெட் நிர்மலா தலைமை வகித்தார். மதுரை லயன்ஸ் கிளப் தலைவர் அழகு முருகன், மைக்கேல் பொறியியல் கல்லுாரி முதல்வர் கற்பகம், சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜெயந்தி, காளையார்கோவில் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் டெய்ஸி ஆரோக்கிய செல்வி, லயன்ஸ் முத்துக்குமார் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் பாலிடெக்னிக் மாணவர்கள் 35 அறிவியல் கண்டுபிடிப்புகளை இடம்பெற செய்தனர்.