நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி செயலர் சேகர் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் அறிவியல் படைப்பை காட்சிபடுத்தி செய்து காண்பித்தனர். தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முத்துபஞ்சவர்ணம், ஆசிரியர் பாண்டிசெல்வி கலந்து கொண்டனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் தேரேந்தல்பட்டி எஸ்.கே.எஸ். பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளியில் கலாமின் பிறந்த நாளை செயற்கை நுண்ணறிவு தினமாக கொண்டாடினர். விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் குறித்து மாணவர்கள் விளக்கினர்.