நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி நிர்வாகி வேங்டாசலபதி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கதிரவன் வரவேற்றார்.
துணைத்தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தார்.பேராசிரியர் இளங்கோவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கண்ணப்பன், ஆறுமுகம், ராமகிருஷ்ணா பள்ளி செயலர் அனந்தராமன், பகீரத நாச்சியப்பன், அறிவியல் இயக்க கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் கலந்து கொண்டனர். ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

