ADDED : பிப் 26, 2026 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கூட்டுறவுபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் லுார்துசாமி தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ஜான் சார்லஸ் தொடங்கி வைத்தார். ஆசிரியர் சாவித்திரி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஆசிரியர் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

