ADDED : நவ 25, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு நடந்தது. கிளைத் தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தார். அனிதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பிரபு அறிவியல் இயக்க செல்பாடுகள் குறித்து பேசினார்.
கிளைத் தலைவராக வீரபாண்டி, செயலாள ராக அலெக்சாண்டர் துரை, பொருளாளராக ஜெயப்பிரியா, துணைத் தலைவராக ஆரோக்கிய அனிதா, துணைச் செயலாளராக அனன்சியா, கவுரவத் தலைவராக பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார்.

