சிவகங்கை; பாரத சாரண சாரணிய இயக்க சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் கல்வி மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார் கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
மாவட்ட செயலர் முத்துக்குமரன் வரவேற்றார். கல்வி மாவட்ட தலைவர்கள் கோவிந்த ராமானுஜம், தியோடர் இன்ப சேகரன், சரவணன் பேசினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கலந்து கொண்டார். கல்வி மாவட்ட செயலர்கள் வீரக்கண்ணன், முத்துக்குமரன், ராமர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மெட்ரிக் பள்ளி கார்த்திகேசன், புனித மைக்கேல் பொறியியல் கல்லுாரி தாளாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சோழபுரம் ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துகண்ணன், புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி முதல்வர் கற்பகம், புனித மைக்கேல் பள்ளி முதல்வர் டெய்சி ஆரோக்கிய மேரி பேசினர்.
நிகழ்ச்சியை மாவட்ட அமைப்பு ஆணையர் நரசிம்மன், நாகராஜன் தொகுத்து வழங்கினர். தேவகோட்டை மாவட்ட அமைப்பு ஆணையர் நாகராஜன் நன்றி கூறினார்.

