நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கல்வி மாவட்ட சாரண சாரணியர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெறும் சாரண இயக்க வைரவிழாவில் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக் கல்வி ஜோதிலட்சுமி, நல்லாசிரியர் கண்ணப்பன், மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட அமைப்பு ஆணையர் நரசிம்மன், மாவட்ட பயிற்சி ஆணையர் வன்னிச்செல்வம், மாவட்டப் பொருளாளர் நாகராஜன், ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா, சாரண சாரணிய ஆசிரியர்கள் ஆரோக்கிய அமுதா, சபரிமலை, விமலா கலந்து கொண்டனர்.

