ADDED : டிச 28, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே உள்ளது சிறுவளி . இந்த ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன்கள் சண்முகம், 43., மெய்யப்பன் 37., நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் மகன் காளிமுத்து 36, சகோதரர்களின் தாயார் ரோட்டில் சென்ற போது அவர் மீது எச்சில் துப்பி உள்ளார்.
சண்முகம், மெய்யப்பன் இருவரும் காளிமுத்துவிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆத்திரமடைந்த காளிமுத்து அரிவாளால் சகோதரர்கள் இருவரையும் வெட்டினார்.ஆறாவயல் போலீசார் காளிமுத்துவை கைது செய்தனர்.

