/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தம்; இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்பு

ADDED : ஜூலை 07, 2025 04:02 AM
சிவகங்கை : ''வேலைவாய்ப்பு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ல் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும்,'' என, சிவகங்கையில் சங்க பொதுச்செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். 8 வது ஊதியக்குழு பலன்களை விரைந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார்மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திட, பொதுத்துறை நிறுவனங்களை காத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும்.
இதுபோன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ல் நடக்கும் அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரும் பங்கேற்பர் என்றார்.