ADDED : பிப் 27, 2024 07:47 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாத்தப்பன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்து ஒன்றிணைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, காளீஸ்வரன், சிங்கராயர், அஞ்சுகம், ஜோசப் செல்வராஜ், மணி அரசு பங்கேற்றனர்.
