/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதை நெல் தட்டுப்பாடு: தவிக்கும் விவசாயிகள்
/
விதை நெல் தட்டுப்பாடு: தவிக்கும் விவசாயிகள்
ADDED : அக் 26, 2024 05:14 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் பத்தாயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
திருப்புவனம் வட்டார வேளாண் மையம் மூலம் விதை நெல் வருடம்தோறும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தாண்டு கோ 50, கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்கள் வேளாண் துறை மூலம் மானிய விலையில் 50 டன் வரை விற்பனை செய்யப்பட்டுஉள்ளன.
ஆனால் விவசாயிகள் பலரும் நோய் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சமாளித்து வளரும் என்.எல்.ஆர்., ரகத்தையே பயிரிடுகின்றனர். வேளாண் துறை மூலமாக 50 கிலோ எடை கொண்ட என்.எல்.ஆர்., நெல் ரகம் ஆயிரத்து 500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த அளவே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனியாரிடம் என்.எல்.ஆர்., ரகம் 30கிலோ கொண்ட ஒரு மூடை விதை நெல் ஆயிரத்து 300 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. போதிய அளவு என்.எல்.ஆர்., ரகம் கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
விவசாயி இளங்கோவன் கூறுகையில், என்.எல்.ஆர்., ரகம் ஏக்கருக்கு 40 மூடை வரை கிடைக்கும், வறட்சியையும் தாங்கி வளரும், தனியார் உரக்கடைகளில் விலை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் விவசாயிகள்விரும்பும் நெல் ரகங்களையே வழங்க வேண்டும், என்றார்.