UPDATED : ஜூலை 04, 2026 04:40 PM
ADDED : ஜூலை 04, 2026 04:30 PM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க விதை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியை ஊக்குவிக்க தரமான விதைகளை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும். முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம், வீரியத்தை உறுதி செய்ய அரசு விதை பரிசோதனை மையங்களில் விதைகளை பரிசோதித்து விதைத்தால் சிறந்த மகசூல் கிடைக்கும்.
தரமான விதைகளை பயன்படுத்துவதின் மூலம் சீரான அதிக முளைப்பு, ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, பூச்சி நோய் தாக்குதலை குறைத்தல் அவசியம். அப்போது தான் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு வருவாய் உயரும். விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் விதைகளை சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள அரசு விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம் என விதை பரிசோதனை அலுவலர் சிவகாமி, வேளாண் அலுவலர் பாலகணபதி ஆகியோர் தெரிவித்தனர். ///
