/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2
/
116 கிலோ புகையிலை குட்கா பறிமுதல்: கைது 2
ADDED : ஜன 20, 2024 01:34 AM
குன்றக்குடி:பிள்ளையார்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்ற வியாபாரி மற்றும் மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்து 116 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிள்ளையார்பட்டி பால் பூத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பதாக காரைக்குடி ஏ.எஸ்.பி., ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் பால் பூத்தை கண்காணித்து வந்தனர். பால் வாங்குவதுபோல் வந்து பலர் பேப்பரில் மடித்து குட்கா பொருட்களை வாங்கி செல்வது தெரிந்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், தண்டபாணி வைத்திருந்த 78 கிலோ புகையிலை மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரிக்கையில் கல்லல் ஒன்றியம் குருந்தம்பட்டு பழனிவேல் என்பவர் புகையிலைப் பொருட்களை தண்டபாணிக்கு விற்பனை செய்தது தெரிந்தது. பழனிவேல் வீட்டில் சோதனை செய்ததில் 38 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த வியாபாரி பழனிவேல் மற்றும் தண்டபாணி கைது செய்யப்பட்டனர்.