/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண் அள்ளிய லாரி பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
/
மண் அள்ளிய லாரி பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 06, 2024 04:34 AM
மானாமதுர : மானாமதுரை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட புது லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மானாமதுரை கிருங்காங்கோட்டை அருகே உள்ள தனியார் சேம்பர் பகுதிக்கு அருகாமையில் உள்ள வைகை ஆற்றில் மணல் திருடப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து ராஜகம்பீரம் குரூப் வி.ஏ.ஓ., மதிவாணன் சோதனை நடத்தினார்.
வைகை ஆற்றில் தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சவுந்தரபாண்டியன் 35, கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் விஜயன் 52, கால்பிரபு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜீவா 28, 3 பேரும் மண் அள்ளும் இயந்திரத்தை கொண்டு பதிவு எண் இல்லாத புது லாரியில் மணலை அள்ளினர்.
இதனைத் தடுத்த வி.ஏ.ஓ., மகேந்திரனை அசிங்கமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து அங்கிருந்து தப்பினர்.
வி.ஏ.ஓ., மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் மேற்கண்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து புது லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரம், ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.