ADDED : அக் 19, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி கிருத்திகா 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
மாணவியை தலைமை ஆசிரியர் சம்பத்குமார், உதவி தலைமை ஆசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் இளந்திரையன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.