ADDED : நவ 21, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாட்டு பண்ணைய சுய வேலைவாய்ப்பு பயிற்சி வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக நிலைய தலைவரும், உதவி பேராசிரியருமான சரவண ஜெயம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்படும் சான்றிதழுடன் கூடிய ஒரு மாத கால சுயவேலை வாய்ப்பு பயிற்சியான கறவை மாட்டு பண்ணைய பயிற்சி புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பரில் துவங்கவுள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரம்.
இப்பயிற்சி வகுப்பில், பயிற்சியுடன் செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 63745 43121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

