நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் பொருள் அறிவியலில் ஆராய்ச்சி வாய்ப்புகள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
வரலாற்று துறை தலைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்தார். மேற்கு ஆப்பிரிக்க பல்கலை., பேராசிரியர் மொசபேலா பெனிட்டோ கலந்து கொண்டு சூரிய மின்கலம் குறித்து பேசினார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் நானோ பொருட்கள் உருவாக்கம் குறித்து பேசினார். பேராசிரியர் சுப்பு வரவேற்றார். கவிதா பேசினார்.
அழகப்பா பல்கலை உயிரி தகவல் துறை பேராசிரியர் பூமி வாழ்த்தினார். பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.