ADDED : பிப் 08, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில், விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறை சார்பில் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான தடுப்பூசி மற்றும் உயிரி மூலப் பொருட்களின் தற்போதைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்க தொடக்க விழா நடந்தது.
விலங்கு நலன் மற்றும் வேளாண்மை துறை தலைவர் வசீகரன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமையேற்று பேசினார்.
அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, பேராசிரியர் இனா சல்வாணி யாஸ்மின், பேராசிரியர் முகமது யூசுப், அழகப்பா பல்கலை அறிவியல் புல முதன்மை ஜெயகாந்தன் பேசினர். பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.