ADDED : ஜன 20, 2026 05:47 AM

மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம் கிளை தலைவர் தேவதாஸ் தலைமையில் நடந்தது.
பொருளாளர் பால முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்வம், நந்தினி, செயற்குழு உறுப்பினர்கள் பொன்னையா, குருசெல்வம், சுந்தர பாண்டியன், பாரதி சத்யா முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்றார். பாரதியாரின் சிறப்பு குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திருமாவளவனும், அரசியல் சாசன பாதுகாப்பு குறித்து மாவட்ட செயலாளர் அன்பரசனும் பேசினர்.
மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு களை மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, வி.ஏ.ஓ., மீனா,மாநில குழு உறுப்பினர் ஜீவ சிந்தன், பொருளாளர் பாலமுருகன் வழங்கினர்.

