நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.
உதவி பேராசிரியை துர்காதேவி வரவேற்றார். கல்லுாரி செயலர் அசோக், முதல்வர் விசுமதி, துணை முதல்வர் சுதாராணி பங்கேற்றனர். நிஜவாழ்க்கை பயன்பாடுகளில் தொழில் முனைவோரின் அடிப்படைகள் என்ற தலைப்பில் தீபன் உரையாற்றினார். உதவி பேராசிரியை கவுசல்யா நன்றி கூறினார்.

