
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வணிகவியல் துறை, முதுகலை கணிதத்துறை, முதுகலை ஆங்கிலத் துறை இணைந்து நிதியில் சைபர் பாதுகாப்பு என்ற பொருளில் கருத்தரங்கு முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
வணிகவியல்துறை தலைவர் செல்வராணி வரவேற்றார். செயலாளர் செபாஸ்டியன் தொடங்கி வைத்தார். வக்கீல் சங்க நிர்வாகி ஜோசப் அருள்ராஜ் தற்போதைய நவீன காலத்தில் நிதியில் சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு, நடைமுறை சட்டங்கள் பற்றி பேசினார்.
துணை முதல்வர் விக்டர் பென வெண்ட்ராஜ் சான்றிதழ் வழங்கினார்.

