ADDED : செப் 20, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,செப்.21-–
சிவகங்கையில் அறிவியல் இயக்கம் சார்பில் எழுத்தறிவு தின கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். முன்னாள் பொது செயலாளர் ராஜமாணிக்கம் துவக்கி வைத்தார். ஊடக மையம் இயக்குநர் காளீஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராதாமுருகேசன், கோபிநாத், எழுத்தாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் பிரபு பங்கேற்றனர். மாநில தலைவர் திருநாவுக்கரசு பரிசு வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராஜூ, ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகானந்தம் பங்கேற்றனர்.
நிர்வாகி பாண்டி நன்றி கூறினார்.
///
