/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பறவைக் காய்ச்சலுக்கு தனி வார்டு
/
பறவைக் காய்ச்சலுக்கு தனி வார்டு
ADDED : பிப் 11, 2026 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டு மற்றும் படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் காய்ச்சல் அறிகுறியுடன் வருவோருக்குச் சிகிச்சையளிக்க மருத்துவக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மருத்துவமனையில் வார்டு எண் 208ல் 10 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக வார்டை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தயார் படுத்தியுள்ளது.

