sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டேராடூன் ராணுவ கல்லுாரி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.30 கடைசி நாள்

/

டேராடூன் ராணுவ கல்லுாரி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.30 கடைசி நாள்

டேராடூன் ராணுவ கல்லுாரி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.30 கடைசி நாள்

டேராடூன் ராணுவ கல்லுாரி சேர்க்கை விண்ணப்பிக்க செப்.30 கடைசி நாள்


ADDED : செப் 20, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2025ம் கல்வி ஆண்டில்சேர செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய ராணுவ கல்லுாரியில் 2025ம் ஆண்டு ஜூலை பருவ மாணவர்சேர்க்கைக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 2024 டிச., 1ல் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதில், சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வயது (1.7.2024ன் படி) 11.5 முதல் 13 க்குள் இருத்தல் வேண்டும். இதற்கான நுழைவு தேர்வு 2024 டிச., 1 அன்று காலை, மதியம் நடைபெறும்.

ஆங்கிலம் (125 மதிப்பெண்), கணிதம்(200 மதிப்பெண்), பொது அறிவு (75 மதிப்பெண்) தேர்வின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முக தேர்வுக்கு (50 மதிப்பெண்) அழைக்கப்படுவர். விண்ணப்பத்தை ''The Commandant, Rashtriya Indian Military College, Garhi Cntt., Dehradun, Uttarakhand- 248 003'' என்ற முகவரியில் பெற்று, விண்ணப்பத்துடன் பொது பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி.,யினர் (ஜாதி சான்று அவசியம்) ரூ.555க்கான காசோலையை HDFC bank, Ballupur chowk, Dehradurm, Uttarakhand (வங்கி குறியீடு1399) யை விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

மற்றொரு விண்ணப்பத்தை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு செப்., 30அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்வகையில் அனுப்ப வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us