/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் ஆற்றில் தொடர் மணல் திருட்டு
/
திருப்புவனம் ஆற்றில் தொடர் மணல் திருட்டு
ADDED : பிப் 18, 2024 01:00 AM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் டூவீலர், தலைச்சுமையாக மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பது கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம்,மதுரை உள்ளிட்ட பகுதிகளில் புதுப்புது குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு உள்ளது.
சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரி ஏதும் இல்லை. கட்டுமான பணி முழுவதும் எம்சான்ட் மணலை நம்பியே உள்ளன.
எம்சாண்ட் மணலை வைத்து பூச்சுப்பணி உள்ளிட்ட ஒரு சில பணிகள் மட்டுமே மேற்கொள்ளலாம்.
சென்ட்ரிங், தூண் அமைக்கும் பணிக்கு ஆற்று மணலைத்தான் பயன்படுத்துகின்றனர். மணல் குவாரிகள் செயல்படாததால் திருட்டு மணலை பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
திருப்புவனம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் டூவீலர்களில் மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களில் மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.
பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்: மணல் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இது மணல் திருடர்களுக்கு சாதகமாக உள்ளது. வருவாய்துறையில் அதிகளவில் பெண்கள் பணிபுரிகின்றனர்.
இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்க இவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆரம்பத்தில் ஒரு சிலர் டுவீலர்களில் மணல் திருடி வந்த நிலையில் தற்போது 10க்கும் மேற்பட்டோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் தெருக்களில் டூவீலர்களில் மணல் மூடைகளை அடுக்கி கொண்டு பலரும் செல்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.