/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கோயிலில் பிப்.26ல் சிவராத்திரி பூஜை
/
திருப்புத்துார் கோயிலில் பிப்.26ல் சிவராத்திரி பூஜை
திருப்புத்துார் கோயிலில் பிப்.26ல் சிவராத்திரி பூஜை
திருப்புத்துார் கோயிலில் பிப்.26ல் சிவராத்திரி பூஜை
ADDED : பிப் 18, 2025 05:05 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிப்.26ல் நடைபெறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு முதற்கால பூஜை இரவு 8:30 மணிக்கு துவங்குகிறது.
மூலவருக்கு அபிஷேகம் நடந்து சர்வ அலங்காரத்தில் திருத்தளிநாதர் அருள்பாலிப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இரவு 10:30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறும்.
இரண்டாம் கால பூஜை அதிகாலை 12:30 மணிக்கும், அதிகாலை 1:00 மணிக்கு அகத்தியர் லிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை, அதிகாலை 3:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறும்.
நான்காம் கால பூஜை அதிகாலை 5:30 மணிக்கும், சுவாமிக்கு பள்ளியறை எழுந்தருளலும்,தொடர்ந்து சிவனடியார்களுக்கு அன்னதானம் நடைபெறும்.