/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு தட்டுப்பாடு
/
திருப்புத்துார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு தட்டுப்பாடு
திருப்புத்துார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு தட்டுப்பாடு
திருப்புத்துார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு தட்டுப்பாடு
ADDED : ஜன 13, 2025 06:41 AM
திருப்புத்தூர் : திருப்புத்துார் தாலுகாவில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் வழங்க, போதிய வேட்டி, சேலை வழங்காததால், கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பொங்கல் தொகுப்புடன், இலவச வேட்டி சேலை வினியோகம் செய்யப்படும். இதற்காக கடைகளுக்கு 90 சதவீத கார்டுகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். ஆனால், பல கடைகளில் 60 சதவீத சேலைகளும், 25 சதவீத வேட்டிகள் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கியுள்ளனர்.
இதனால் கார்டுதாரர்களுக்கு வேட்டி அல்லது சேலை மட்டுமே வழங்கி அனுப்புகின்றனர். சில கடைகளில் முந்தி செல்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ேவட்டி, சேலைகளை வழங்கி விடுகின்றனர்.
இதனால் வேட்டி, சேலையை முழுமையாக ரேஷன் கடைகளுக்கு வழங்காத நிலையில் எப்படி வினியோகிக்க முடியும் என விற்பனையாளர்கள் புலம்பி வருகின்றனர்.