/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டிரைவர்கள் தட்டுப்பாடு
/
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டிரைவர்கள் தட்டுப்பாடு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டிரைவர்கள் தட்டுப்பாடு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டிரைவர்கள் தட்டுப்பாடு
ADDED : செப் 14, 2024 11:59 PM
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, வெளிநோயாளிகள், எலும்பு முறிவு, குழந்தைகள் சிறப்பு மருத்துவம், கண் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. டாக்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாணவர்களை அழைத்து வருதல், மருத்துவ முகாமிலிருந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருதல், கண்புரை அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளை வீட்டிற்கு அழைத்து சென்று விடுதல் என 5 வாகனங்கள் உள்ளது.
இந்த வாகனங்களை இயக்குவதற்கு 2 டிரைவர் தான் பணிபுரிகின்றனர். 3 டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். ஒருவர் மட்டுமே பணிபுரிகின்றார்.
கடந்த சில மாதங்களாக ரத்தவங்கி முகாம், மருத்துவ முகாம் செல்வதற்கும் கண்புரை அறுவை சிகிச்சை நோயாளிகளை அழைத்து செல்வதற்கு வாகனங்களை இயக்க டிரைவர் இல்லாத நிலை உள்ளது.
மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் உரிய டிரைவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலைய மருத்துவர் மகேந்திரன் கூறுகையில், மருத்துவமனையில் இரண்டு டிரைவர்கள் உள்ளனர்.
மற்ற வாகனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.