/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீட்டர்கள் பற்றாக்குறை மின் இணைப்பில் தாமதம்
/
மீட்டர்கள் பற்றாக்குறை மின் இணைப்பில் தாமதம்
ADDED : அக் 28, 2025 03:50 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி யில் மீட்டர் தட்டுப் பாட்டால் மின் இணைப்பு தாமதமாவதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
வீடு, வணிக,தொழில் நிறுவனங்களுக்கு தற்போது 'ஸ்டேடிக் மீட்டர்' வைத்து மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் பணியாளர் மூலம் மின்நுகர்வு கணக்கிடப் படுகிறது. இதைத் தவிர்க்க மின்துறையினர் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இணைப்பு கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
புதிதாக பெரிய அளவில் ஸ்டேடிக் மீட்டர் வாங்கப்படுவதில்லை. குறைந்த அளவிலேயே சப்ளை ஆகிறது. புதிய இணைப்புகள் அனைத் திற்கும் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் கொடுக்க முடியவில்லை. வீடுகளுக்கு புதிய இணைப்பு கொடுக்க மீட்டருக்காக காத் திருக்க வேண்டியுள்ளது. இணைப்பு கிடைக்க ஒரு மாதத்திற்கும் மேலாவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

