/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் பிளம்பர், எலக்ட்ரீசியன் தட்டுப்பாடு
/
அரசு மருத்துவமனையில் பிளம்பர், எலக்ட்ரீசியன் தட்டுப்பாடு
அரசு மருத்துவமனையில் பிளம்பர், எலக்ட்ரீசியன் தட்டுப்பாடு
அரசு மருத்துவமனையில் பிளம்பர், எலக்ட்ரீசியன் தட்டுப்பாடு
ADDED : ஜன 29, 2024 05:39 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறையால், குடிநீர் குழாய் சீரமைப்பு, மின் பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இங்கு, தினமும் வெளிநோயாளிகளாக 850 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். தீவிர சிகிச்சை, மகப்பேறு, வெளிநோயாளிகள், எலும்பு முறிவு, குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் உள்ளன.
டாக்டர்கள் 230 பேர் வரை பணிபுரிகின்றனர். மருத்துவமனை நிர்வாக பணிகளில் எலக்ட்ரீசியன், பிளம்பர், சமையலர் என 30 பணியிடங்கள் உள்ளன. ஆனால், இதில் 20 பணியிடம் காலியாகவே உள்ளன.
ஊழியர்கள் பற்றாக்குறையால் குடிநீர் குழாய் பராமரிப்பு, மின் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. 800 உள் நோயாளிகளுக்கு தினமும் ஒரு சமையலர் மட்டுமே உணவு சமைத்து வழங்குகிறார். வார்டுகளில் ஏ.சி.,க்கள் பழுடைந்துள்ளன. இவுற்றை சரி செய்ய போதிய எலக்ட்ரீசியன்கள் இல்லை.
இங்கு காலியாக உள்ள எலக்ட்ரீசியன், பிளம்பர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல் கூறியதாவது, இதற்காக போதிய ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் மின்சாதனம், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்கு இடையூறு இல்லை. நிரந்தர ஊழியர்களை அரசு தான் நியமிக்கவேண்டும், என்றார்.