ADDED : பிப் 13, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி வரும் உள்வீதி சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. கடந்த 20 ஆண்டு காலங்களில் இச்சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை குறுகியுள்ளது.
இதனால் குழாய் பதிக்கும் போதும் புதிதாக சாலை போடும்போதும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.