நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் சித்த மருத்துவ தினம் தலைமை மருத்துவர் செந்தில் ராஜ் குமார் தலைமையில் நடந்தது.
உதவி மருத்துவர் திவாகரன் முன்னிலை வகித்தார்.சித்த மருத்துவ அலுவலர் ரமேஷ் பாபு சித்த மருத்துவத்தின் வாழ்வியல் முறை மற்றும் நோய் அணுகாமல் இருப்பது, தொற்றா நோய்களிடமிருந்து மீண்டு வருவது பற்றி சிறப்புரை ஆற்றி பேசினார்.
சித்தா மருந்தாளுனர் சொர்ணம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.