மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் சித்தர்கள் தின விழா நடைபெற்றது. சித்த மருத்துவர் பத்மாவதி தலைமை தாங்கினார்.
மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வேலுச்சாமி,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளை தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவத்தின் சிறப்பு குறித்து மருத்துவர்கள் பேசினர்.
* திருப்புத்தூர் அரசு மருத்துவமனயில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டது.
திருப்புத்தூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பற்றிய முழுமையான அணுகுமுறை குறித்து விளக்கப்பட்டது.
அகத்திய முனிவர் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, தீபாராதனை நடந்தது.
சித்த மருத்துவர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். மருந்தாளுனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் சிவகுமார், முத்துக்குமார் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மருத்துவப் பணியாளர் புனிதா நன்றி கூறினார்.