நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள குருங்கலுாரைச் சேர்ந்தவர் காளிதாஸ் 23. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையில், நேற்று முன்தினம் செட்டிநாடு அருகேயுள்ள கொத்தமங்கலம் வனப்பகுதியில் காளிதாஸ் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
செட்டிநாடு போலீசார் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

