நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை அரசு மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடை பெற்றன.
இதில் மானாமதுரை சீனிவாசன் சிலம்ப பள்ளியை சேர்ந்த அகதீஸ்குமார், மதன்குமார், சுவாதி, ஷாலினி ஒற்றைக் கம்பு பிரிவில் முதல் இடத்தையும், ஆதித்யா, ஹரிணி 2ம் இடத்தையும், இரட்டைக்கம்பு பிரிவில் ரித்தீஷ், புகழேஷ், ரோஷினி, முதல் இடத்தையும்,அரிபாலா, ஹர்ஷிதா 2ம் இடத்தையும்,தொடுமுறை பிரிவில் கரண், ஷெரோன் முதல் இடத்தையும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

