ADDED : அக் 15, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; தென் இந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான சிலம்பம், யோகா போட்டி மதுரையில் நடந்தது.
இதில், சிவகங்கை அருகே சோழபுரத்தை சேர்ந்த ஆதிஅரண் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் முதல் பரிசை 3 மாணவர், 2 மாணவிகள், இரண்டாம் பரிசை 2 மாணவர், 4 மாணவிகள், மூன்றாம் பரிசை 2 மாணவர், 2 மாணவிகள் பெற்றனர். யோகாசன போட்டியில் ஜமுனா, மகாலட்சுமி, புகழ்மதி மற்றும் சகானா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இம்மாணவர்களை கழக தலைவர் பாலசுந்தரம், செயல் அலுவலர் அறிவானந்தம் ஆகியோர் பாராட்டினர்.