ADDED : ஏப் 26, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் சார்பில்போப் பிரான்சிஸ் மறைவையடுத்து நினைவஞ்சலி மவுன ஊர்வலம் நடந்தது.
சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில், பிரான்சிஸ் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கிறிஸ்தவர்கள் புனித ஜஸ்டின் பள்ளியில் இருந்து மவுன ஊர்வலமாக புனித அலங்கார அன்னை சர்ச் வரை சென்றனர். அங்கு பிரான்சிஸ்- திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அலங்கார அன்னை சர்ச் பாதிரியார் ஜேசுராஜா, முதன்மை குரு அருள் ஜோசப், உதவி பாதிரியார் கிளிண்டன், மறைமாவட்ட ஆயர் இல்ல செயலாளர் பிரான்சிஸ் பிரசாத், பொருளாளர் ஆரோ, ஜான்பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

