தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துர்நாற்றத்தில் சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட்

துர்நாற்றத்தில் சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட்

துர்நாற்றத்தில் சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட்


ADDED : செப் 28, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி,செப்.29-

சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் தற்போது இரண்டாவது கூரை அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்டு நடுவே பயணிகள் அமர இருக்கைகள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் சில இருக்கைகளை காணவில்லை. அந்த இடத்தைச் சுற்றி குப்பை தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் இருக்கைகளை பயன்படுத்த முடியாமல் நீண்ட நேரம் பஸ்சுக்காக நின்று கொண்டே காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. கூரை அமைக்கும் பணிவுடன் பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதிகளையும் சீரமைத்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us