/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வலைகளோடு வந்தவர்களை மீன்களோடு வழியனுப்பிய சிங்கம்புணரி மட்டிக்கண்மாய்

ADDED : பிப் 04, 2024 04:52 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மீன்கள் கிடைத்த நிலையில் மக்கள் அவற்றை மூடைகளாக கட்டி வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டி ஊராட்சி மட்டிக்கரைப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள மட்டிக்கண்மாய் 137 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடத்தப்படாமல் மீன்கள் விடப்பட்டிருந்தது.
இந்தாண்டு மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் ஆயக்கட்டுதாரர்கள் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு கண்மாய் மடை முன்பாக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு கிராமப் பெரியவர்கள் துண்டு வீசி மீன்பிடி விழாவை துவக்கி வைத்தனர்.
கண்மாயின் இருபுறமும் கூடியிருந்த ஏராளமானோர் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி மீன்களைப் பிடித்தனர்.
இதில் பலருக்கும் விரால், கட்லா, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. வலை கொண்டு மீன் பிடித்தவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் அவர்கள் சாக்கு மூடைகளில் மீன்களை கட்டி துாக்கி சென்றனர்.