/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய தடகள போட்டிக்கு சிவகங்கை மாணவி தேர்வு
/
தேசிய தடகள போட்டிக்கு சிவகங்கை மாணவி தேர்வு
ADDED : செப் 23, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த ஜூனியர் மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவி எஸ்.பிரத்திகா வெள்ளி வென்று, தேசிய தடகள போட்டிக்கு தேர்வானார்.
சிவகங்கை ஆக்ஸ்வர்டு மேல்நிலை பள்ளி மாணவி பிரத்திகா. இவர் ஈரோட்டில் நடந்த மாநில தடகள போட்டியில், 16 வயது பிரிவு நீளம் தாண்டுலில் வெள்ளி பதக்கம் பெற்று, தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவருக்கு தடகள பயிற்றுநர் ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.