/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய கராத்தே போட்டி சிவகங்கை மாணவர் வெற்றி
/
தேசிய கராத்தே போட்டி சிவகங்கை மாணவர் வெற்றி
ADDED : டிச 24, 2024 04:44 AM

சிவகங்கை: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 3ம் இடம் பிடித்த சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவரை கலெக்டர் ஆஷா அஜித் பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடந்தது. இதில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தமிழக அணியின் சார்பில் சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் சுஜன்சிங் வெண்கல பதக்கம் பெற்றார்.
மாணவரை கலெக்டர்ஆஷா அஜித், பள்ளி நிறுவனர் முன்னாள் மத்திய இணை அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன்,முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் விஜயசரவணகுமார் பாராட்டி பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள்அருணா தேவி, கனி, ஆசிரியர் நர்மதா பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.