ADDED : மே 30, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்க மாதாந்திர தமிழ் இலக்கிய கூட்டம் நடந்தது. தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
நல்லாசிரியர்கள் பகீரத நாச்சியப்பன், கண்ணப்பன், தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். புலவர் சங்கரலிங்கம் எழுதிய வெற்றி நிச்சயம் என்ற நுாலை முன்னாள் தமிழ் சங்க தலைவர் அன்புத்துரை வெளியிட்டார். புலவர் சங்கரலிங்கம் 'சிலம்பு காட்டும் வாழ்வியல்' என்ற தலைப்பில் பேசினார். சங்க பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.