/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வாலிபர் கொலையில் 3வது நாளாக உடலை பெற மறுப்பு
/
சிவகங்கை வாலிபர் கொலையில் 3வது நாளாக உடலை பெற மறுப்பு
சிவகங்கை வாலிபர் கொலையில் 3வது நாளாக உடலை பெற மறுப்பு
சிவகங்கை வாலிபர் கொலையில் 3வது நாளாக உடலை பெற மறுப்பு
ADDED : ஜூலை 08, 2025 04:52 AM

சிவகங்கை: சிவகங்கை வாலிபர் கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இரு சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
'கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம்' என, உறவினர்கள் மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர்.
சிவகங்கை, தமறாக்கி செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு, 29, ஜூலை 4 இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சிவகங்கை போலீசார், கார் டிரைவர் வசந்தகுமார், 21, வேலாங்கப்பட்டி சூர்யா, 26, என இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த தமறாக்கி பாண்டி மகன்கள் அபிமன்யு, ஹரிஹரனை, நேற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கைது செய்தனர்.
மனோஜ் பிரபுவை கொலை செய்துவிட்டு தப்பிய அபிமன்யு, தன் தம்பி ஹரிஹரனை வெளிநாட்டிற்கு அனுப்ப கோவை சென்றுள்ளார்.
சிவகங்கை போலீசார், கோவை விரைந்தனர். அவர்கள், பஸ்சில் மதுரை செல்வதாக தகவல் கிடைக்க, தாராபுரம் அருகே பஸ்சை மறித்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 'கொலை சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரையும் கைது செய்ய வேண்டும்.
அதன் பின்னே, மனோஜ் பிரபு உடலை வாங்குவோம்' எனக்கூறி, நேற்று சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம், மனோஜ் பிரபுவின் சகோதரர் ராணுவ வீரர் அஜித்குமார் மனு அளித்தார். டி.எஸ்.பி., அமல அட்வின் விசாரணைக்கு, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

